64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது!!

507

Rape

பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 64 வயதான தலித் இனப் பெண்ணையே குறித்த இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமாரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த இளைஞனைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆயர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.