அரசாங்க சேவை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

1044

Doctor

அரசாங்க வைத்தியர்கள் அரசாங்க சேவையில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய நிலையங்களில் சேவை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.