மயங்கி விழுந்த நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!!

288

vindhiya

பல தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை விந்தியா, தற்போது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்தார்.

இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான்கு நாட்களாக தினமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மாலை அவரது உடல் நிலை திடீரென மோசம் அடைந்து, மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.