வவுனியா தீ விபத்தில் காயமடைந்த கணவனும் மரணம்!!

574

Capture

வவுனியா தீ விபத்தில் காயமடைந்திருந்த கணவனும் சிகிச்சை பலனின்றி நேற்று(28.01) மரணமானார். வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன் சுதாஜினி (28) நேற்று முன்தினம் மரணமானார். இவரின் கணவரான பாலச்சந்திரன் கஜேந்திரன் (40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்று மாலை மரணமானார் என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

sucide

தொடர்பான செய்தி..

வவுனியாவில் தீயில் எரிந்து பெண் பலி : கணவன் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில்!!(படங்கள்)