இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு.
-
-
- பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு.
- தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
- தனியார் நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்படும். எனவே தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
- வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
- கற்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
- ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா
- விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்.
- மண்ணெண்ணெய் விலை மேலும் 6 ரூபாவால் குறைக்கப்படும்
- நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும்.
- பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைக்கப்படும்.
- சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
- 400கிராம் பால்மா விலை 325 ரூபாவாகும்
- சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
- நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
- கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
- டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு
- மாசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
- மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
- பாண் விலை 6 ரூபாவால் குறைப்பு
- இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு
- வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 15 வீதத்தால் குறைக்க தீர்மானம்
- அதிகமான நிறுவனங்கள் மீதான வரியை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க தீர்மானம்
- 1000 சி.சிக்கு குறைந்த மோட்டார் வாகனங்களுக்கு 15 சதவீத வரிக்குறைப்பு
- மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்களுக்கான வரி முற்றாக நீக்க தீர்மானம்
- சீமெந்து விலையை 90 ரூபாவால் குறைக்க எதிர்பார்கின்றோம்
- மதுவரி இரு மடங்கு அதிகரிக்கப்படும்
- கசினோ வியாபாரிகளுக்கு 1000 வீதம் வரி
- திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு
- விளையாட்டு நிகழ்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதான வரி 1000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
- கையடக்கத் தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்யும் அட்டைகளுக்கு காணப்பட்ட 25 சதவீத முற்றாக நிராகரிப்பு
- பாவனையில் இருந்த அரச வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்
- மாபொல புலமைப்பரிசில் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
- யுத்தத்தில் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகையுடன் கூடிய 5 இலட்சம் கடன் கொடுப்பணவுகள்
- கைத்தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்
- அனைத்து வங்கிகளும் நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் தமது கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்
- வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு செலுத்தப்படும் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் குறைப்பு
- கடன் அட்டைகளுக்கான வரி நூற்றுக்கு 8 வீதத்தால் குறைப்பு
- ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் மிஹின் லங்கா விமான சேவை இணைக்கப்படும்
- சுகாதாரத்துக்கு 3 வீதம் ஒதுக்கீடு
- கல்விக்கு 6 வீதம் ஒதுக்கீடு
- சிரேஷ்ட பிரஜைகளுக்கு பஸ் கட்டணம் 50 வீதத்தால் குறைப்பு
- மத்திய வர்க்கத்தினர் 250 ரூபா கொண்டு வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்
-