வவுனியா தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கல்வியற் கல்லூரி மாணவிக்கு உதவி!!(படங்கள்)

815

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கற்றல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக சிறியளவு நிதியுதவியினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை வழங்கியது.

இவ் நிகழ்வு நேற்று(30.01) தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் இவ் உதவியினை தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவியின் தாயாரிடம் வழங்கி வைத்தார்.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், ஊடகப் பிரிவைச்சேர்ந்த திரு செ.சுகந்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_6106 IMG_6110IMG_6107