வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நடந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் மரணம்!!

597

sula

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஏ- வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஏ9 பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்துடன் மோதிப் படுகாயமடைந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் தோணிக்கல்லைச் சேர்ந்த  எஸ்.சுலக்சன் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருசாந்தன் என்ற மற்ற மாணவர் தொடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவைக்கு அண்மித்து இடம்பெற்ற இந்த விபத்துத் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.