வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது!!

607

வவுனியா விளாகத்திக்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் நேற்று (02.02) தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

விளாத்திக்குளம் புதுவெளிக்குளம் காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலின்போதே வெட்டி வீழ்த்தப்பட்ட 90 அதிகமான மரங்களும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் அப்பிரதேச காடுகளில் நின்ற 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைத செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

11 12 13