மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!!

842

Maranam

அம்பலாந்தோட்டையில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவர் மயங்கி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலன மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக இன்று மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற பாடசாலையின் 10ம் ஆண்டில் கல்வி பயின்ற, 15 வயதான சமோத் சத்சர என்ற மாணவரே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் ஓடிக்கொண்டிருந்து போது மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக அம்பலாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.