வவுனியா கனகராயன்குளம் புதூர் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் 3 மாடுகள் பலி!!

829

வவுனியா கனகராயன்குளம் புதூர் சந்திக்கு அருகில் இன்று(06.02) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதியதில் மூன்று மாடுகள் பரிதாபகரமாக தலை நசுங்கி இறந்ததுடன் பாரஊர்தி தலைகீழாக கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

11121415   13