வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

526

Accident

வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று(06.02) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, குருமன்காடு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற தபால் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை அதே வீதி வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் மோட்டர் சைக்கிள் சாரதியும் காயமடைந்தனர்.

இதில் தபால் ஊழியரான கே.சுரேஸ்குமார் (34) ,மோட்டார் சைக்கிளில் சென்றவரான எஸ்.பசான் (19) ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.