அப்பிள் நிறுவனத்தால் பாரிய சரிவை எதிர்நோக்கிய டுவிட்டர்!!

525

Iphone

பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் இருப்பது தெரிந்ததே.

இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட iOS 8 இயங்குதளத்தில் காணப்படும் குறைபாடுகளால் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை சரியான முறையில் பயன்படுத்த முடியாது நிலை காணப்படுகின்றது.

இதனால் மொபைல் சாதனங்களின் ஊடாக மாதாந்தம் 292 மில்லியன் பயனர்களை டுவிட்டர் நிறுவனம் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது 288 மில்லியன் பயனர்களையே பெற முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியன் பயனர்களை இழப்பதற்கு iOS 8 இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.