அண்மையில் யாழ்பாணம் செல்வதற்காக பரந்தன் பூநகரி ஊடாக பயணித்த அந்த வீதியில் கண்ட காட்சி ஒருகணம் எம்மை திகைக்க வைத்தது . அதாவது மேற்படி வீதியின் ஒரு புறத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யபட்ட நெல்லை வீதி முழுவதும் பரவி காயவிடப்பட்டிருந்தது.
சுமார் 10km நீளத்துக்கு அறுவடை செய்யபட்ட நெல் வெயிலில் உலர வைக்கபட்டிருந்தது. அதாவது வெறும் வீதியில் இவ்வாறு நெல் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் காணப்பட்டது . மூன்று வருட மனித மற்றும் இயந்திர உழைப்பில் போடப்பட்ட இந்த பிரதான வீதிக்கு பெருமளவிலான மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது . மேற்படி பிரதேச விவசாயிகள் அதனை நெல் உலர வைக்கும் களங்களாக பயன்படுத்தி வருகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயம் .
.பண்டிதர் .