கணவனின் தொல்லை தாங்க முடியாமல் கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த மனைவி!!

536

Kill

துருக்கியில் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவனை அவரது மனைவி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

துருக்கியை சேர்ந்த கோனுல் (49) என்ற பெண் தன் கணவனின் (67) கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்து பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது,

எண்ணற்ற கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த நான், கணவரின் அன்பால் 20 நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்.

ஆனால் அதற்கு பின்னர் தான் கணவரின் வக்கிரபுத்தி எனக்கு தெரிய வந்தது. அவர் விடிய விடிய ஜேர்மன் நீலப்படங்களை பார்த்து அதேபோல் என்னையும் நடந்து கொள்ள கட்டாயப்படுத்துவர்.

அவரின் ஆசைக்கு நான் இனங்கவில்லை என்றால், என்னை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இனியும் இந்த வேதனை தாங்க முடியாததால், அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து துடித்துடிக்க கொன்றேன் என தெரிவித்துள்ளார்.