போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்க முடியாதிருக்கும் அளவிற்கு பொலிஸ் தரப்பில் இருந்து சாட்சிகள் முன்வைக்கப்படாததால் சந்தேகநபருக்கு நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






