வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அறிவித்தல்!

1166

10968489_1390759514566406_5383004850053819572_n

வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 15-02-2015  ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரியின்  கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் பழையமாணவர் சங்க யாப்பு தொடர்பான திருத்தங்களும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது .

வவுனியா கோயில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கென தயாரிக்கப்பட்ட யாப்பின் வரைபினை இத்துடன் இணைத்துள்ளோம்.(யாப்பை பார்வையிட ) இதனை நன்கு ஆராய்ந்து ஏனைய நண்பர்களுடனும் பகிர்ந்து செய்ய வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வரும் பொதுக்கூட்டத்திற்குமுன் அறியத்தருமாறு தயவன்புடன் வேண்டிநிற்கின்றோம். கூட்டத்திற்கும் தவறாது சமூகம் தரவும்.வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கென தயாரிக்கப்பட்ட யாப்பினை ஆராய்ந்து அங்கீகரிப்பதற்கும்,புதிய யாப்பிற்கமைவாக நிர்வாகசபைக்குரிய மேலதிக உறுப்பினர்களை தெரிவுசெய்வதும் முக்கிய அம்சங்களாகும் .

யாப்பினை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் .

வவுனியா கோயில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க யாப்பு -2015

.