11வது உலகக் கிண்ணம் : இலங்கைக்கு மோடி வாழ்த்து!!

472

Modi

நாளை ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கின் மூலமே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பினை மேற்கொண்டும் அவர் வாழ்த்தினை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி இவ்வாறு வாழ்த்துக்களை பறிமாறியுள்ளார்.