வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் கண்தெரியாத, ஒரு கை இல்லாத முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி!!

344

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் ராஜன் கல்வி பிரிவில் தேவன் என்ற பெயரை கொண்ட தென்னகோன் சரத் அவர்கள் 1995ல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தில் இரு கண் பார்வையையும், ஒரு கையையும் இழந்தார் .

குருநாகலில் 1977 இல் பிறந்து 1978இல் இன பிரச்சனை காரணமாக வவுனியா பொன்னாவரசன்குளத்தில் குடியேறி தனது 16 ஆவது வயதில் நாட்டுக்காக போராட சென்று இன்று இந்த அவல நிலையுடன் கிளிநொச்சி செல்வாநகரில் மிகுந்த கஷ்டத்துடன் மனைவி ,ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார் .

இவர் தனக்கு வாழ்வாதார உதவி வழங்குபடி விடுத்த வேண்டுகோளை அடுத்து தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவருடன் தொடர்பு கொண்டு அவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன உதவி வேண்டும் என கேட்டு கொள்ள, தனக்கு ஒரு ஸ்பீக்கர் செட் வாங்கி தரும்படியும் அதை வாடகைக்கு கொடுத்து தனது வாழ்கையை கொண்டு செல்ல முடியும் என அவர் சொன்னதன் பிரகாரம் சுவிசில் வசிக்கும் ஒரு அன்பர் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) முகப்புத்தகத்தில் விடுத்த வேண்டுகோளை பார்த்து அவரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான இரு கோன்கள், அம்பிளிபயர் ,மைக் ,ஸ்டாண்ட் என பெறுமதியான பொருட்களை வழங்கி இருந்தார் .

இந்த பொருட்களை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார், சமுக ஆர்வலர் தாவீது, தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் நிதர்சன் ஆகியோர் 13.02.2015 இன்று நேரடியாக கிளிநொச்சி சென்று வழங்கி இருந்தனர் .

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த தேவன் என்கிற தென்னகோன் சரத் அவர்கள் தனக்கு இந்த உதவி பேருதவி என்றும் கண்ணன் அண்ணா பல நாட்களாக என்னுடன் தொலைபேசியில் கதைப்பார். அப்போதெல்லாம் எப்படியாவது உங்களுக்கு உதவுவேன் என கூறுவார், அதேபோல் என்று அதை செய்து விட்டார் அவருக்கும், உதவிய சுவிஸ் உறவுக்கும் எனது ஜீவன் இருக்கும் வரை நன்றிகள் இருக்கும் என்றார்.

DSCN4368 DSCN4372 DSCN4373 DSCN4375