35 மணிநேரம் தொடர்ந்து ஆடி கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடிகள்!!(வீடியோ)

508

தாய்லாந்தில் காதலர் தினத்தை முன்னிட்டு, 35 மணி நேரங்கள் நடனமாடிய ஜோடிகள் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர். Ripley’s Believe It or Not என்ற அமைப்பு ஆண்டுதோறும், விநோதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு பட்டாயா(Pattaya) நகரில் தொடர் நடன போட்டியை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியில் தாய்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 10 ஜோடிகள் கலந்துகொண்டனர். இந்த நடன போட்டியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் மட்டும் இடைவெளி அனுமதிக்கப்படும்.

இதில் ஒரு ஜோடி மட்டும் இடையில் போட்டியிலிருந்து விலகியது. எஞ்சிய 9 ஜோடிகளும் தொடர்ச்சியாக சுமார் 35 மணி நேரங்கள், 1 நிமிடம், 1 விநாடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று நிறைவுபெற்ற இந்த போட்டி, முந்தைய சாதனையான 35 மணி நேரங்கள் தொடர் நடன சாதனையை முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.

நடன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கின்னஸ் புத்தக நிறுவனம் சார்பில் 200,000 தாய் பட்கள்(Thai baht) வழங்கியதுடன் ஒவ்வொரு ஜோடிக்கும் வைர மோதிரம் வழங்கி கெளரவித்தது.

L L2