வவுனியாவில் வாள் வெட்டிற்கு இலக்காகி மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனா்.
வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த குழுவொன்றே வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது வாளால் வெட்டியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தவா்கள் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனா்.
இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரையும் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அங்கிருந்தவா்கள் அனுமதித்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் ஆச்சிபுரத்தைச் சேர்ந்த இக் கும்பல் இதற்கு முன்னரும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது மக்களை அச்சறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாக மக்கள் அச்சம் கொண்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






