இந்திய அணி வெற்றி : தொடரும் பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ண தோல்வி!!

517

Ind

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக விராத் கோஹ்லி 107 ஓட்டங்களையும், தவான் 73 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா 74 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் தரப்பில், சொஹாலி கான் 5 விக்கெட்டுகளையும், வஹாப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 224 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

பாகிஸ்தான் மிஸ்பா அல்ஹக் 87 ஓட்டங்களையும் அஹ்மத் ஷேசாத் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொகித் சர்மா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மேலும் 1992, 1996, 1999, 2003, 2011 ஆகிய உலகக்கிண்ணத் தொடரை தொடர்ந்து தற்போது 6வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றையும் தக்க வைத்துள்ளது இந்திய அணி.