நேற்று முன்தினம் (13.02) வெளியான தனுஷின் அனேகன் பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் ஆமைரா டாஸ்டர் நாயகியாக நடித்துள்ளார்.
ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் பின்னியெடுத்திருந்தார் தனுஷ்.
முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.






