பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் உறவினர்கள் தமிழ் சினிமாவில் சிலர் உண்டு. அந்த வகையில் மீண்டும் ஏ.ஆர் ரஹ்மானின் சொந்தம் ஏ.ஆர்.அசார் காஷிப், ஒரு இசை வீடியோ அல்பம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில் சிறு வயதிலிருந்தே ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களை கேட்டுதான் வளர்ந்தேன். அவருடைய ஸ்டூடியோவில் இசையை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
தற்போது என் மாமா ரஹ்மான் மற்றும் என் அண்ணன் ஜி. வி. அவர்களின் ஆசியுடன் கண்ணாலே வீடியோ அல்பம் காதலர் தினத்தில் வெளியிடுகிறோம் என்றார்.






