அநேகன் திரைப்படத்தை பார்க்க நேற்று சென்னை உதயம் திரையரங்கிற்கு வந்த தனுஷ் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரைப்படத்தை பார்க்க வந்த தனுஷ் மற்றும் அனிருத்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். பொலிசார் எவ்ளவோ முயன்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கூட்ட நெரிசலில் இருந்து இருவரும் ஒருவாறு பாதுகாப்பாக திரையரங்கிற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். திரையரங்கின் கண்ணாடிகள் பல உடைந்து நொருங்கியதில் பலர் காயமடைந்தனர். தனுசின் காரும் சேதத்திற்கு உள்ளானது.






