உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் : அர்ஜுன ரணதுங்க!!

688

Arjuna Ranatunga

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்லுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.

சனிக்கிழமை மட்டக்களப்பிலுள்ள உள்ளூர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்த போது அவரிடம் உலக கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

திறமையான பயிற்சியுடனும் திடகாத்திரத்திடனும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியை எமது இலங்கை அணியினர் எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு என தெரிவித்தார்.