8ஆவது ஐ.பி.எல் : மத்தியூஸ் 7 கோடிக்கு விற்பனை, மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஏலத்தில் எடுபடவில்லை!!

338

sanga8ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, டில்ஷான் ஆகியோர் ஏலத்தில் விற்கப்படவில்லை.

உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடர் முடிந்த மறு கணமே ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. 8ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்க உள்ளன.

8ஆவது ஐ.பி.எல். போட்டிக்காக அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களும், புதிய வீரர்களும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல். ஏலம் பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தற்போது நடைபெறுகிறது.

யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை 60 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூசை 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லாவை ஆகியோரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

முரளி விஜயை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 1.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை 3.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

அமித் மிஸ்ராவை 3.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

தினேஷ் கார்த்திக்கை 10.5 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை 2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

குசேல் ஜனித் பெரேராவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை

பத்திரிநாத்தை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 30 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

கெமரூன் வயிட், பிராட் ஹொட்ஜ், ரோஸ் டெய்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

புஜாரா, மைகேல் கார்பெர்ரி, மெத்தீவ் வேட், லூக் ரோஞ்சி, தினேஷ் ராம்டின், பிரெண்டென் டெய்லர் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

மைகேல் ஹசியை 1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியது.

டில்ஷான், சாமுவேல்ஸ், இர்பான் பதான் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

சீன் அபோட்டை 1 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

சகிர் கான்,அபிமன்யு மிதுன்,முனாப் படேல் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஜெயதேவ் உனட்கட்டை 1.1 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்டை 3.8 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

லக்ஷ்மி ரடன் சுக்லாவை 30 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

பிரவீன் குமாரை 2.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

டெரன் சமியை 2.8 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் ரவி போபரா 1 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம் மை 50 இலட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

அஜந்த மெண்டிஸ், நெதன் மெக்லம், எல்பி மோர்கல் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

டேவிட் ஹசி, ரொபின் பீட்டர்சன், அசார் முஹம்மத் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

டேவிட் வைசை 2.8 கோடிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

பர்விஸ் மஹ்ரூப், சுரங்க லக்மால், பார்ஹான் பெஹர்டீன், ஜோனதன் கார்ட்டர், நாதன் ரியர்டன் , டெக் பிரேஸ் வெல், கிரான்ட் எல்லியோத்ட், என்டன் தேவ்சிச், சுதீப் த்யாகி, ஷோன் டைட் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

லக்ஷ்மிபதி பாலாஜி, ஆர்.பி.சிங், பொலிஞ்சர் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

கெயில் அபோட்டை 30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியது.

மிட்செல் மெக்லேனகானை 30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஷர்பாராஸ் கானை 50 லட்சத்துக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹனுமா விஹாரியை 10 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

ஸ்ரெயர் ஐயரை 2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

டெரன் பிராவோ, ரிச்சர்ட் லெவி, வேணுகோபால் ராவ், கல்லும் பெர்குசன் ஆயயோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

பிராட் ஹொட்சை 50 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

ராகுல் ஷர்மாவை 30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

பிரக்யன் ஓஜாவை 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்து வீரர் ஹெடம் மைனை 70 லட்சத்துக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.