வவுனியாவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)

1154

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (16.02) அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளது.

தீப்பொறியொன்று காற்றில் பறந்து வந்து வந்து வீட்டின் மீது வீழ்ந்ததனாலேயே இச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் பாடசாலை மாணவர்கள் இருவரது கற்றல் உபகரணங்கள் உட்பட வீட்டின் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டார் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3 2 1