வவுனியாவில் வேலையயற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல் : வவுனியா பட்டதாரிகள் சங்கம் அழைப்பு!!

554

image

வவுனியாவைச் சேர்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்டதாரிகளுடனான சந்திப்புக்கு நாளை 20.02.2015 வெள்ளிக்கிழமை வவுனியா பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது .

வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா கண்டி வீதியில் சனச அபிவிருத்தி வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்படுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் மேற்படி சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புகளுக்கு: TEL : 0245610154  

பட்டதாரிகள் சங்கம் வவுனியா

சனச அபிவிருத்தி வங்கியின் மேல்( இரண்டாம் மாடி )

கண்டி வீதி

வவுனியா