படகு மூலம் சென்ற நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!!

564

Aus

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் குறிப்பிட்டுள்ளார்.