வவுனியாவில் ஆலயத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!!(படங்கள்)

487

வவுனியா – கந்தபுரம் நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று (19.02) கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் பூசை நடைபெற்று நிறைவடைந்தவுடன் பூட்டப்பட்ட நிலையில் இருந்த கோவில், இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோவிலில் அம்மனின் தங்க ஆபரணங்கள் மற்றும் குத்துவிளக்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12