வவுனியா பட்டதாரிகள் சங்கம் நியமனம் வழங்ககோரி பிரதமரிடம் மனு கையளிக்க தீர்மானம்!(படங்கள் ,காணொளி)

506

வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்கான  பட்டதாரிகள்  மன்றத்தின் அனுசரணையுடன் வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுடனான அவசர சந்திப்பு வவுனியா கண்டிவீதியில் வலயக் கல்விபணிமனையின்  எதிரில் சனச அபிவிருத்தி வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் அமைந்துள்ள வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் தலைவர் எம்.ஆனந்தராஜா தலைமையில் இன்று (20.02.2015) வெள்ளிகிழமை காலை 10..00மணியளவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் ஒன்றுகூடி தமக்கு நிரந்த நியமனம் வழங்ககோரி கௌரவ பிரதம மந்திரியிடம் மனு ஒன்றை கையளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் .இத்தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆந் திகதி குறித்த மனுவினை பிரதமரிடம் கையளிக்கவும் தீர்மானிக்கபட்டுள்ளது .

மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவ பிரதம மந்திரி மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோரை அனைத்து பட்டதாரிகளும் கொழும்பில் சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் தீர்மானம் எட்டப்படுள்ளது.

எனவே இதுவரை காலமும் வவுனியா பட்டதாரிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொள்ளாத வவுனியாவை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் விரைவாக தமது பதிவினை மேற்கொண்டு நிரந்தர நியமனம் பெறும் செயல்பாடுகள் அனைத்துக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் கேட்டுகொள்ளபடுகிறீர்கள்.அத்துடன் பட்டதாரிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொள்ள தவறும்  வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்களில் எதிர்காலத்தில் பிரச்சனைகள் நிலவுகின்ற காலகட்டங்களில் பொறுப்புள்ள அமைப்பு என்றரீதியில் உரிய ஆவணங்கள் இன்றி அவர்களுக்காக குரல்கொடுக்கவோ செயல்படவோ முன்வரமாட்டாது  என்பதையும் தெரியபடுத்துகின்றோம் என அச்சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜா தெரிவித்தார் .

11004034_965047586848528_1803330241_n 11008918_965047610181859_462771403_n DSC_0116 siva (1)