பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதால் 9 வயதுச் சிறுவனை கடுமையாக தாக்கிய உறவினர்கள் : கிளிநொச்சியில் சம்பவம்!!

552

Boy

பரீட்சையில் குறைவான புள்ளி பெற்ற ஒன்பது வயது பாடசாலை மாணவனான சிறுவனை உறவினர்கள் மோசமாக தாக்கியதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை செல்லும் வசதிக்காக விஸ்வமடு தொட்டியடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தார்.

இதன்போது பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்தமைக்காக குறித்த உறவினர் இவரை தாக்கி காயப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.