என்னைக் களங்கப்படுத்த சதி நடக்கிறது : நடிகை லட்சுமி மேனன் குமுறல்!!

623

Laxmi menon

லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணையதளங்களிலும், வட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வருகிறது. இதனால் திரைப்பட துறையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது இந்த வீடியோவை குறித்து லட்சுமி மேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.