வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் -2015!!(அறிவித்தல்)

610

karumari2

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழா

நிகழும் ஜய வருடம் மாசி மாதம் 11ஆம்நாள் (23.02.2015)திங்கட்கிழமை பஞ்சமி திதியும்  அஸ்வினி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.00மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி மாசிமாதம் 20தாம்  நாள் (04.03.2015)புதன்கிழமை  மாசிமக நன்நாளில் தீர்தோற்சவத்துடன் நிறைவுபெற ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் திருவருளும் குருவருளும் நிறைந்துள்ளதால்  அனைவரும் வருகை தந்து திருவிழாகளிலில் கலந்து கொண்டு அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு   அன்புடன் அழைக்கிறோம் .

தகவல் :ஆலய பரிபாலன சபை

தொடர்புகளுக்கு :0242225034

10984548_966143083405645_1620819970960551410_o