விமல் வீரவன்சவின் மனைவி கைது!!

683

VImal

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே, சஷி வீரவன்ச மாலபே பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஷி வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவரே தாமாக சென்று வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.