கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!!

1180

Kuthu

ஹம்பாந்தோட்டை – பெதகிரிய வெஹெரகொட பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23.02) அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது கணவனை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை அடுத்து மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.