இணைய விளம்பரங்க​ள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு..!

742

Computer-Virus

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையத் தளங்களை பயன்படுத்தும்போது தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.

இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு கிளிக் செய்க.