வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த மோதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

774

Fight

வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (23.02) திங்கட்கிழமை காலை பாடசாலை வளாகத்திற்குள் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் போது சாதாரண தரத்தைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒரு மாணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.