மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (23.02) அதிகாலை 1.30 அளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள் மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






