சைபர் தாக்குதல் நபரை கண்டுபிடித்து தருவோருக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள அமெரிக்கா!!

1000

US dollars notes are checked at the Kore

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பான உண்மையான தகவல்களை ஆதாரத்துடன் வழங்குவோருக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமான அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சைபர் தாக்குதல் குறித்து தகவல்களை வழங்குவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை சன்மானப் பணம் இது என அறியப்படுகிறது.

சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் இணையதளங்களில் பிரவேசித்து சுமார் 100 மில்லியன் டொலர்கள் வரை கொள்ளையிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்கீ 01,02,03,04,05 மற்றும் ஸ்லவிக் ஆகிய பெயர்களில் இணையதளங்களில் குறித்த நபர் ஊடுறுவியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹொலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்த ‘தி இன்டெர்வியூ’ திரைப்படம் வெளியாக இருந்த தருணத்தில் அதனை வெளியிடவிருந்த சொனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சுமார் 3 ஆயிரம் கணினிகள் அத்துமீறப்பட்டு பல புதிய படங்களின் கோப்புக்கள் திருடப்பட்டிருந்தன.

இதற்கு ரஷ்யாவும், தென் கொரியாவுமே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.