கல்லூரி மாணவிகளின் மடியில் அமர்ந்த மாணவன் : புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானதால் சர்ச்சை!!

556

Students

மங்களூரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மடியில் மாணவர் ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கடந்த 22ம் திகதி விளையாயட்டாக பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படத்தால் தற்போது 5 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் இது குறித்து புகார் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் கல்லூரி மாணவர்களிடையேயும் பொது மக்களிடமும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்ததோடு விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.