அயர்லாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி!!

493

Ireland v United Arab Emirates - 2015 ICC Cricket World Cup

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்திய அயர்லாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியுள்ளது.

உலகக் கிண்ண போட்டிகளின் 16வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள அயர்லாந்தும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் இன்று மோதிக்கொண்டன.  இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பாக ஷெய்மான் அன்வர் அதிகூடிய ஓட்டங்களாக 106 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை எடுத்தது.

279 ஓட்டங்கள் என்ற இலக்குடன் அடுத்ததாக களம் இறங்கிய அயர்லாந்து அணி, 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

அயர்லாந்து அணி சார்பாக வில்சன் 80 ஓட்டங்களையும் கெவின் ஓ ´பிரையன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.