வவுனியா செட்டிக்குளம் – ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை உடையர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரியவர்கள் வாரிக்குட்டியூர் மற்றும் யடியந்தோட்டை பிரசேதங்களில் வசிப்பவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
புதையல் அகழ்விற்காக எடுத்துவரப்பட்டிருந்த நீர் மோட்டார் உள்ளிட்ட உபகரணங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






