வவுனியா ஓமந்தையில் நடந்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!

578

Accident

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26.02) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், ஒருவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சுன்னாகம், ஏழாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த வானில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.