வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 27.02.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ் .சிதம்பரநாதன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார் .அத்துடன் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பழையமாணவர் சங்கத்தினர் கல்விவலய உத்தியோகத்தர்கள் மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலகர்கள் பெற்றோர் என பல்வேறு பட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர் .
மேற்படி விளையாடுபோட்டியில் மோனிகா இல்லம் முதலாவது இடத்தையும் லியோனி இல்லம் இரண்டாம் இடத்தையும் இமெல்டா இல்லம் மூன்றாம்இடத்தையும் ஏஞ்சலினா இல்லம் நான்காவது இடத்தையும் எமிலி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுகொண்டன. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் திரேசம்மா சில்வா உரையாற்றும் போது கடுமையான சிரமங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக நிகழ்வினை நடத்துவதில் பெரும் இடைஞ்சல்களை சந்தித்ததாகவும் இருந்தபோதும் என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பான முறையில் இறைவனின் ஆசியோட்டும் வெற்றிகரமாக நடத்தமுடிந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்கள் உரையாற்றுகையில் 125 வருட நிறைவை கொண்டாட உள்ள இந்த பாடசாலையானது அகில இலங்கை ரீதியில் ஒரு பழம் பெரும் பாடசாலையாக திகழ்வதோடு இந்த கல்லூரியின் மாணவர்கள் எல்லாகாலங்களிலும் கல்லூரிக்கு பெருமை தேடி தந்தவர்களாகவே இருகின்றனர் . இந்த பாடசாலையில் இருந்து கல்வி விளையாட்டு மற்றும் இணைபாட விதான செயல் பாடுகளில் மிகவும் திறமை மிக்கவர்கள் உருவாக்கபடுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டார் . மேலும் மாணவர்கள் பெரியோரை மதிக்கின்ற பண்பினை கொண்டவர்களாக இருந்தாலே அது அவர்களின் வாழ்வில் உயர்ச்சியை ஏற்படுத்தும் என வலியுறுத்தினார் .
இறுதியில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கான பரிசில்கள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டதோடு விளையாட்டு குழுவின் தலைவரான வேணி ஆசிரியையால் நன்றி பகரப்பட்டு பாடசாலை கீதத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது .

















