ஈழத் தமிழர்களே தென்னிந்திய திரைப்படங்களை இணையத்தில் தரவேற்றுகின்றனர் : நடிகர் சரத்குமார் குற்றச்சாட்டு!!

1186

Sarathkumar

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் தென்னிந்திய திரைப் படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் தரவேற்றம் செய்வதாக தென்னிந்திய நடிகர் சரத்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் ஈழத் தமிழர்களே இவ்வாறு தென்னிந்தியத் திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சுவிஸ்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளிலிருந்தே சட்டவிரோதமான முறையில் தமிழ்த் திரைப்படங்களை தரவேற்றம் செய்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையிளிலுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வருவதாக குறிப்பிட்ட சரத்குமார், தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் இலங்கையில் பணியாற்ற முடியும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, விரைவில் இலங்கைக்குச் சென்று திரைப்படங்களை படமாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.