செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் 230 வறிய, மற்றும் பெரும்பாலானோர் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு அங்குள்ள அமைப்புகள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி ,சமூக அறவாரியத்தின் அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் 01.03.2015 இன்று மாணிக்கம் பண்ணை பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சத்தின் செட்டிகுளம் இணைப்பாளர் தயான், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ம.செந்தூரன், செயலாளர் ரா.சங்கர், சனசமுக நிலைய தலைவர் ச.சதாசிவம் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வி.சுந்தரம் உட்பட படிவம் 1,2,3,4 இன் அமைப்புகளின் தலைவர்கள் , உறுப்பினர்கள் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
















