ஏலத்திற்கு வரும் பிரதமரின் இரத்தம்!!

550

Winston-Churchill

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிலின் ரத்தம் ஏலத்திற்கு வரவுள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இடுப்பெலும்பு முறிவு சிகிச்சைக்காக மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பரிசோதனைக்காக சர்ச்சிலின் ரத்தத்தில் சில துளிகள் எடுக்கப்பட்டது. இந்த ரத்தத்தை பாட்ரிசியா என்ற பெண் தாதி தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்தார். இந்நிலையில், அவர் இறந்த பிறகு தற்போது அந்த ரத்தம் ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சர்ச்சிலின் 50வது ஆண்டு நினைவு தினம் இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. அதைமுன்னிட்டு , டோர்செட்டில் அடுத்த மாதம் நடைபெறும் ஏல நிகழ்ச்சியில், இந்த ரத்த மாதிரியும் ஏலம் விடப்படுகிறது. இது 600 பவுண்ஸ் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.