வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)!!

471

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் இன்றைய தினம் 03.03.2015 செவ்வாய்கிழமை தேர் திருவிழா இடம்பெற்றது.

இன்று காலை 5.30  மணிக்கு கோவிலின் பிரதமகுருவாகிய ஜெயந்தி குருக்களின் தலைமையில் காலைகிரியைகள் ஆரம்பமாகி  காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர்ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில்  ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை  நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க  வந்தடைந்தாள். .

தூக்குகாவடி மற்றும் செதில்,பால்காவடிகள் கற்பூரச் சட்டிகள் அத்துடன் அங்கபிரதட்சனம்செய்துகொண்டும்  கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில்   அம்பாளின் ரதம்  இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது .

படங்கள் :கஜன்

 15624_970786672941286_5494567907430687126_n 17785_970787369607883_1816343337758721245_n 10401611_970786346274652_1521129897690524642_n 10264486_970787579607862_2691776438512772389_n 1782123_970777536275533_9062084971153542193_n 553357_970787109607909_5836688327706619485_n 64252_970786492941304_8204784104247582352_n

11053040_970786436274643_6406406109581115916_n 11044561_970776786275608_3241710111402823121_n 11043177_970786126274674_8391574828256589129_n 11043084_970776616275625_1824472915777416136_n 11041746_970774232942530_4915688589730282083_n

11037564_970774389609181_512787583715802659_n 11034219_970788192941134_4245245660183010379_n 11026345_970775169609103_8601491959436469986_n 11026014_970787869607833_6065741173517677353_n 11025995_970774926275794_1138109729966483873_n 11024621_970774859609134_4591667431437423513_n 11018826_970776956275591_7920609951780060043_n

11018330_970786779607942_5529240620614998459_n 11009102_970776286275658_246794773929263334_n 10984063_970773852942568_4191926337949703286_n 10846129_970774576275829_1470683464955229138_n 10653481_970777102942243_4958112304619889078_n

10474147_970787222941231_1057218291347603037_n 10462337_970774132942540_8161836505413935112_n 10410200_970787959607824_4060635100994817228_n 10401611_970786346274652_1521129897690524642_n 10264486_970787579607862_2691776438512772389_n 11043084_970776616275625_1824472915777416136_n 11041746_970774232942530_4915688589730282083_n