உலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் தென்னாபிரிக்காவும், அயர்லாந்து அணிகளும் மோதிக்கொண்டன.
கென்பராவில் இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி தலைவர் துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்தார்.
அயர்லாந்துக்கு எதிரான உலக கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் அம்லா டு பிளசிஸ் ஆகியோர் சதம் அடித்தனர். இதில் அம்லா 159 ஓட்டங்களையும்டு பிளசிஸ் 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அயர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற கடும் பிரயத்தனத்தில் ஈடுபடவேண்டியதோடு 412 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களம் இறங்கியது.
அயர்லாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
அயர்லாந்து அணி சார்பாக பால்பிர்னி அதிகூடிய ஓட்டங்களாக 58 ஓட்டங்களை பெற்றார். தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் அப்போட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன் அடிப்படையில் தென்னாபிரிக்க அணி 201 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.






